L'école expliquée aux parentsமுதல் முறையாக பள்ளி : ஆரம்பப் பள்ளியின் அமைப்பு - OnisepTV : l’information pour l’orientation en vidéo
L'école expliquée aux parentsமுதல் முறையாக பள்ளி : ஆரம்பப் பள்ளியின் அமைப்பு
Système Educatif
பிரான்ஸ் நாட்டில், குழந்தைகள் 2 மற்றும் 3 வயதுகளுக்கிடையே பள்ளிக்குச் செல்லத் தொடங்க முடியும்.
இதற்காக அவர்கள் முதலில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு, நீங்கள் நகராட்சி மன்றத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளிக்கு செல்லப் போகிறார்கள் என்பதையும், நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் சொல்வார்கள். அதன் பின் பள்ளியின் தலைமையாசிரியர் உறுதியான சேர்க்கைச் செயல்முறையை முடிப்பார்.
தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளியை நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
குழந்தைகள் மூன்று வருடங்களுக்கு முன்பருவக் கல்வி பயில்கிறார்கள். சிறு வகுப்பு, நடுநிலை வகுப்பு மற்றும் பெரிய வகுப்பு என உள்ளன. உங்கள் குழந்தைகள் மற்றவர்களுடன் உரையாடுவதற்குக் கற்றுக்கொள்வர், தங்களை வெளிப்படுத்துவர், தங்களது மொழித் திறன்களை வளர்த்துக்கொள்வர் மற்றும் எழுதுதல், படித்தல் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்கத் தொடங்குவர்.
உங்கள் குழந்தைகளுக்கு திங்கட்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை, வாரம் ஒன்றுக்கு 24 மணிநேரம் கற்றுக் கொடுக்கப்படும்.
ஆசிரியர், ‘லே மெய்ட்ரி’ (பள்ளி ஆசிரியர்) அல்லது ‘லா மெய்ட்ரெஸ்ஸி’ (பள்ளி ஆசிரியை), குழந்தைகளை வகுப்பில் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். உங்கள் குழந்தைகள் என்ன கற்றுக்கொள்கின்றனர் என்பதைப் பற்றியும், அதில் அவர்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதையும் பற்றி நீங்கள் அவர்களுடன் பேச முடியும்.
6 வயதிலிருந்து, உங்கள் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமான கல்வி கட்டாயமாகும்.
உங்கள் குழந்தைகள் தொடக்கக் கல்வி பயிலத் தொடங்குவர்.
ஐந்து பள்ளி வருடங்கள் உள்ளன: CP, CE1, CE2, CM1 மற்றும் இறுதியாக CM2.
குழந்தைகள் முன்பருவப் பள்ளிக்குச் சென்றது போலவே, திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிக்குச் செல்கிறார்கள்.
அவர்கள் பிரெஞ்சு மொழியைப் புரிந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தும் வகையில் தங்களது படித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் ஆங்கிலம் அல்லது ஜெர்மன் போன்ற மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற இதர பாடங்களைக் கற்றுத்தருவதும் துவக்கப்படுகிறது.
உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், அவர்களது ஆசிரியர் அவர்களுக்கு உதவி செய்வார்.
வருடம் முழுவதும் பல மதிப்பீடுகளை ஆசிரியர் மேற்கொள்வார், அவை பற்றி உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
இந்த மதிப்பீடுகள் உங்கள் குழந்தைகள் என்ன கற்றுள்ளனர் என்பதை நிச்சயப்படுத்த உதவுகின்றன, முன்னேற்றத்தை அளவிடுகின்றன மற்றும் அவர்களது அறிவு நிலையை சோதிக்கின்றன. இந்த அறிக்கைகள் உங்கள் குழந்தைகள் படிக்கும் காலத்தில் அவர்களின் பள்ளிப் பதிவேடுகளில் ஆவணப்படுத்தப்படுகின்றன. அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை நீங்கள் பொதுவான அடிப்படைகளை (அடிப்படை அறிவு, திறன்கள் மற்றும் கலாச்சார அடித்தளம்) அறியப் பெறுவீர்கள்.
குழந்தைகள் பள்ளி நேரத்தின்போது கூடுதல் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதையும், பள்ளி செயல்படும் நேரத்துக்குப் பின்னரும், விடுமுறை நாட்களின்போதும் நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்கின்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
தொடக்கப் பள்ளிக்குப் பின், 6e வகுப்புக்காக உங்கள் குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைகின்றனர். உங்கள் குழந்தைகள் முன்னேறுவதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
சிறுவர் பள்ளி, மத்திய பள்ளி, அரசாங்க பள்ளி, தனியார் பள்ளி: மத்திய பள்ளி அமைப்பு, தெளிவாக மற்றும் சுருக்கமாக பெற்றோருக்கு விளக்கப்படுகிறது.
Vidéo publiée en mars 2017
Cela peut vous intéresser
L'école expliquée aux parents - மத்திய பள்ளியில் மற்றும் உயர்நிலை பள்ளியில் திசையமைவு
மத்திய பள்ளி, மற்றும் இரண்டாம்நிலை பள்ளி திசையமைவு எப்படி செயலாகிறது?இந்த வீடியோவில் திசையமைவு செயல்...
L'école expliquée aux parents- பள்ளி வாழ்க்கை அமைப்பு
பள்ளி என்பது ஒரு வாழும் இடம்: இந்த வீடியோவில் மாணவர்களை பக்கத்திலிருந்துகவனிப்பவர்களை பாருங்கள், பள்ளியில் எப்படி...
L'école expliquée aux Parents - பிரான்சில் பள்ளி செயல்திட்டம்
பெற்றோர்களுக்காக இந்த 5 வீடியோ தொடர் பிரான்ஸில் இருக்கும் பள்ளிகளை அறிமுக படுத்துகின்றது, அவற்றின் அமைப்பு,...
L'école expliquée aux parents - மத்திய பள்ளி, இரண்டாம்நிலை பள்ளி மற்றும் பின்னர்
மத்திய பள்ளி, இரண்டாம் நிலை பள்ளி, பயிற்சி மையம்: 6ம் வகுப்பிலிருந்து டெர்மினலில் வரை நடப்பது மற்றும் அதன்...