L'école expliquée aux parents - மத்திய பள்ளி, இரண்டாம்நிலை பள்ளி மற்றும் பின்னர் - OnisepTV : l’information pour l’orientation en vidéo
L'école expliquée aux parents - மத்திய பள்ளி, இரண்டாம்நிலை பள்ளி மற்றும் பின்னர்
Système Educatif
CM2வுக்குப் பின், உங்கள் குழந்தைகள் உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் 6e ஆண்டில் நுழைகின்றனர்.
உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பள்ளியில் நான்கு வருடங்கள் கல்வி கற்பிக்கப்படும்:
- 6e என்பது தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கு மாறிக்கொள்வதற்கான காலம் ஆகும், மற்றும் அது தொடக்கப் பள்ளியில் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு வலுச் சேர்க்கிறது;
- 5e, 4e, மற்றும் 3e ஆகியவை மாணவர்கள் தங்களுடைய அறிவு, திறன்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஆழ்ந்து தெரிந்துகொள்ளவும் விசாலப்படுத்தவும் உதவுகின்றன.
உங்கள் குழந்தைகள் பல பாடங்கள், பல ஆசிரியர்கள் மற்றும் பல வகுப்பறைகளைக் கொண்ட ஒரு கால அட்டவணையைப் பின்பற்றுவர். அந்தந்த நாளைப் பொறுத்து பல்வேறு நேரங்களில் அவர்கள் தொடங்கி முடிப்பார்கள். அவர்கள் இணையதளப் படிப்பு, சூழலியல் மற்றும் இதர மொழிகள் போன்ற கூடுதல் பாடங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுடைய தொடக்கப் பள்ளிக் கல்வியில் உள்ளதைப் போன்றே, குழந்தைகளுக்கு உடல்நலம் மற்றும் குடியுரிமை பற்றிக் கற்பிக்கப்படுகிறது, மேலும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள்.
நடுநிலைப் பள்ளியில், அவர்கள் ‘நோக்குநிலை’ படிப்பைத் தொடங்குகின்றனர், உதாரணமாக, அவர்கள் படிப்பும் தொழில் பாதையும் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தலைமையாசிரியர் உங்கள் குழந்தைகளின் வேலையையும் நடத்தையையும் பற்றி கவனித்துக் கொள்ள வேண்டிய ஆசிரியர் ஆவார்.
அவர்கள் கற்றுக்கொண்டதைப் பரிசோதிப்பதற்காக சோதனைத்தேர்வுகள் நடத்தப்பட்டு தரநிலைகள் மற்றும் கருத்துக்கள் வழங்கப்படும். உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது சிரமங்கள் இருந்தால் அவர்கள் உதவுவார்கள்.
3e வகுப்பில், உங்கள் குழந்தைகள் தமது முதலாவது தேர்வை எழுதுவர். மேலும் அவர்கள் தங்களது படிப்பு அல்லது தொழில் பாதைக்கான முதலாவது தெரிவையும் மேற்கொள்வார்கள்.
நடுநிலைப் பள்ளிக்குப் பின், மாணவர்கள் தங்கள் படிப்பை ஆறாம் வகுப்பிலோ அல்லது தொழில் பயிற்சிக் கல்லூரியிலோ தொடர்கிறார்கள்.
ஒரு பொது அல்லது தொழில்முறை சார்ந்த ஆறாம் வகுப்பில், உங்கள் குழந்தைகள் Baccalaureate (இளங்கலை) எனப்படும் மூன்றாண்டு பட்டயப் படிப்பைப் படிப்பார்கள்.
2nde இல், அவர்கள் ஏற்கனவே நடுநிலைப்பள்ளியில் பயின்ற பெரும்பாலான பாடங்கள் கற்பிக்கப்படும்.
மேலும் அவர்கள் பொருளியல், மேலாண்மை மற்றும் உயிரிதொழில்நுட்பவியல் போன்ற ஆழ்ந்தறியும் பாடங்களையும் கற்பார்கள். 1re இல் மேற்கொண்டு படிப்பதற்கு முன்னதாக எந்த தொழில் பாதையைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு இது உதவும், அதன் பின் பல்வேறு இளங்கலைப் படிப்புகளைப் படிக்க வழிவகுக்கின்ற டெர்மினேல் (இறுதி ஆண்டு) படிப்பைத் தெரிவு செய்யவும் அவர்களுக்கு உதவும்.
அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கலைகள் மற்றும் பல்வேறு வகையான படிப்புகளை இலக்கு வைத்த வெவ்வேறு இளங்கலைப் பட்டங்கள் வழங்கப்படலாம்.
இந்த பட்டயக் கல்வியானது 2 முதல் 8 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்ககூடிய உயர் படிப்புகளுக்கான படிக்கட்டுகளாகும்.
தொழில் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் உங்கள் குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு CAP கல்வி, அல்லது மூன்றாண்டுகள் இளங்கலை தொழிற்கல்வி பயில்வார்கள். வர்த்தகத்தைப் பற்றியும் அவர்கள் கற்பார்கள்.
தொழில் கல்லூரியில், அவர்கள் பாடங்களைப் படிப்பதுடன் ஒரு வேலைச் சூழலில் பணிபுரியவும் செல்கிறார்கள்.
தொழில் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் நிறுவனங்களுக்குள் வேலை செய்வார்கள் மற்றும் அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்படும்.
எனவே CAPs மற்றும் தொழிற்கல்வி இளங்கலைப் படிப்புகள் வேலை பெறுவதற்கு உதவுகின்றன, என்றாலும் மேற்கொண்டு படிப்பதற்கும் வாய்ப்பு வழங்குகின்றன.
உங்கள் குழந்தைகள் தங்களுக்குப் பக்கபலமாக உள்ள உங்கள் மூலம், தங்கள் படிப்பு முடியும் வரை உதவியும் தினசரி ஆதரவும் பெற வேண்டும். இதனால், அவர்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.
மத்திய பள்ளி, இரண்டாம் நிலை பள்ளி, பயிற்சி மையம்: 6ம் வகுப்பிலிருந்து டெர்மினலில் வரை நடப்பது மற்றும் அதன் பிறகு என்ன செய்வது என்று, பெற்றோர்களுக்கு தெளிவாக மற்றும் சுருக்கமாக விளக்குகிறது.
Vidéo publiée en mars 2017
Cela peut vous intéresser
L'école expliquée aux parents - மத்திய பள்ளியில் மற்றும் உயர்நிலை பள்ளியில் திசையமைவு
மத்திய பள்ளி, மற்றும் இரண்டாம்நிலை பள்ளி திசையமைவு எப்படி செயலாகிறது?இந்த வீடியோவில் திசையமைவு செயல்...
L'école expliquée aux parents- பள்ளி வாழ்க்கை அமைப்பு
பள்ளி என்பது ஒரு வாழும் இடம்: இந்த வீடியோவில் மாணவர்களை பக்கத்திலிருந்துகவனிப்பவர்களை பாருங்கள், பள்ளியில் எப்படி...
L'école expliquée aux Parents - பிரான்சில் பள்ளி செயல்திட்டம்
பெற்றோர்களுக்காக இந்த 5 வீடியோ தொடர் பிரான்ஸில் இருக்கும் பள்ளிகளை அறிமுக படுத்துகின்றது, அவற்றின் அமைப்பு,...
L'école expliquée aux parentsமுதல் முறையாக பள்ளி : ஆரம்பப் பள்ளியின் அமைப்பு
சிறுவர் பள்ளி, மத்திய பள்ளி, அரசாங்க பள்ளி, தனியார் பள்ளி: மத்திய பள்ளி அமைப்பு, தெளிவாக மற்றும் சுருக்கமாக...