Transcription
உங்கள் குழந்தைகள் பள்ளியில் நன்றாகச் செயல்பட வேண்டுமென்றும், சமுதாயத்தில் நேர்மையான உறுப்பினராகத் திகழ வேண்டுமென்றும் நீங்கள் மட்டுமே நினைப்பதில்லை!
தொடக்கப் பள்ளியில், தலைமையாசிரியர் பள்ளிக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.
உங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுவதற்கு, வழக்கமாக ‘லே மெய்ட்ரி’ (பள்ளி ஆசிரியர்) அல்லது ‘லா மெய்ட்ரெஸ்ஸி’ (பள்ளி ஆசிரியை) எனப்படுகின்ற உங்கள் குழந்தைகளின் ஆசிரியரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில் அட்செம்கள் (ATSEMs) எனப்படுகின்ற உதவியாளர்களும் இருக்கிறார்கள், அவர்கள் சில சமயங்களில் சில காரியங்களில் குழந்தைகளுக்கு உதவுகிறார்கள்.
நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ‘முதல்வர்’ என அழைக்கப்படுகிறார்.
பள்ளிக் கட்டிடங்கள் பெரியதாக உள்ளன, அங்கு அதிகமான மாணவர்கள் இருக்கிறார்கள் மற்றும் பல பேர் அங்கு பணிபுரிகிறார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் இருக்கிறார், ஆனால் உங்கள் குழந்தைகளின் வேலைச் செயல்திறனையும் நடத்தையையும் பற்றி நீங்கள் அதிகமாக வகுப்பாசிரியரிடமே பேச வேண்டும். அவர்கள் இதர சக ஆசிரியர்களிடம் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள், உதாரணமாக, குழந்தைகள் தங்களுடைய பாடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பள்ளியின் வேலை நேரத்துக்கு அப்பால் குழந்தைகளுக்கு உதவ முதுநிலை கல்வி ஆலோசகரும், உங்கள் குழந்தைக்கு சிறப்பு உதவியும் ஆலோசனையும் வழங்குவதற்கு பள்ளியின் உளவியலறிஞரும் இருக்கிறார்கள்.
குடும்ப அல்லது நிதிப் பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் உதவுவதற்கு சமூக சேவகர் இருக்கிறார்.
மேலும், சமூகப் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு பள்ளிச் செவிலியரையும், சேர்க்கை அல்லது பணம் செலுத்தல் நடைமுறைகளுக்கு நிர்வாகப் பணியாளர் மற்றும் செயலரையும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
ஆறாம் வகுப்பில், தலைமை ஆசிரியர் ‘முதல்வர்’ (the Proviseur) எனப்படுகிறார்.
உயர்நிலைப் பள்ளியைப் போன்றே கல்லூரியிலும் அதே மாதிரியான பணியாளர்கள் இருக்கிறார்கள்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென்றே சிறப்புப் பணியாளர்கள் உள்ளனர், அவர்கள் அவர்களுடைய பள்ளி வாழ்க்கை முழுவதும் அவர்களுடனேயே தங்கியிருப்பார்கள்.
பள்ளியில், உங்கள் குழந்தைகள் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் அல்லது பள்ளி உணவகத்தில் சாப்பிடத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
மேலும் உங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட நடுநிலைப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்புக் கல்லூரிகளிலும் தங்கியும் படிக்க முடியும்.
உங்கள் குழந்தைகளுக்கு முக்கியம் எனக் கருதப்படும் இதர பல இடங்களும் உள்ளன:
படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் உதவக்கூடிய ஆவண நூலகங்கள் மற்றும் தகவல் மையங்கள்
வீட்டுப்பாடம் செய்வதற்கு படிக்கும் அறைகள்
படம் வரைதல், இசை மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கு இளைஞர் மையங்கள், மாணவர் மையங்கள் அல்லது கிளப்கள்.
நடுநிலைப் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும்போது, உங்கள் குழந்தையின் பள்ளி நேரம் மாறுபடும். அவர்கள் அதிகமாகப் படிக்க வேண்டியிருக்கும், அதிகமான பாடங்கள் இருக்கும் மற்றும் வீட்டுப்பாடமும் அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அவர்களுடைய கால அட்டவணையைப் பொறுத்து அவர்கள் தங்களிடம் சரியான கோப்புறைகள், புத்தகங்கள் மற்றும் பயிற்சி ஏடுகளை வைத்திருக்க வேண்டும். அவற்றை தனிப்பட்ட லாக்கரில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
பள்ளி என்பது வாழ்க்கைக்கான இடம் ஆகும். மக்களுக்கிடையிலான தொடர்புகளை எளிதாக்குவதற்கு, எது அனுமதிக்கப்பட்டுள்ளது அல்லது அனுமதிக்கப்படவில்லை என்பதையும், பள்ளிக் கால அட்டவணை மற்றும் பாதுகாப்புத் தகவல்களையும் விவரிக்கின்ற பள்ளி விதிகள் உள்ளன. மதச்சார்பின்மை சாசனமும் உள்ளது, அது நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஒன்றுசேர்ந்து வாழக் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும், கருத்து சுதந்திரம் அல்லது ஆண்-பெண் சமத்துவம் போன்ற பிரான்ஸ் நாட்டின் மதிப்புகளைப் பகிர்ந்துகொள்வதையும் அவர்களுக்குக் கற்பிக்கிறது.
உங்கள் குழந்தைகள் பள்ளி வாழ்க்கையில் செயலூக்கத்துடன் பங்கேற்க முடியும், உதாரணமாக, அவர்கள் தங்களுடைய சக மாணவர்களுக்கு பிரதி நிதியாக இருக்க முடியும், மாணவர் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க முடியும்; அது சிற்றுண்டிச் சாலைக்காக அல்லது பள்ளி சுற்றுலா பிரயாணங்களுக்காக இருக்கலாம்; மேலும் அவர்கள் உதாரணமாக சூழலியல் அல்லது ஒருமைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியும்.
நீங்கள் பிரான்சு நாட்டவராக இருந்தாலும் அல்லது வேறு நாட்டவராக இருந்தாலும், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் உங்கள் பிரதிநிதியாகச் செயல்படும் பெற்றோர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் வாக்களிக்க முடியும், நீங்களே கூட தேர்ந்தெடுக்கப்படலாம்.
நீங்கள் இந்தக் கூட்டங்களுக்குச் செல்லும்போது, முடிவுகளை மேற்கொண்டு பள்ளியை நடத்துவதற்கும் உங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள்.
பெற்றோர்களாக இருந்தபடி, உங்கள் குழந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசுவதற்காக உங்கள் குழந்தைகளின் ஆசிரியரை நீங்கள் சந்திக்க வேண்டியது முக்கியமானதாகும். நீங்கள் இணையதளம் வாயிலாகவும் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும், ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் வீட்டிலிருந்தே அணுகும் வகையில் டிஜிட்டல் தளத்தை பள்ளி கொண்டிருக்கிறது. அதில் வீட்டுப்பாடத்திற்கான குறிப்புகள், செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்கள், தரநிலைகள், வருகையின்மைகள் போன்றவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் குழந்தைகளின் பள்ளி வேலையையும் பள்ளி வாழ்க்கையையும் கண்காணிப்பதன் மூலம், அவர்களுடைய வெற்றிக்கும் நலனுக்கும் நீங்கள் உதவி செய்வீர்கள்.