Transcription
உங்கள் குழந்தைகள் வளரும்போது, தங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். தங்களுடைய தொழிற்பாதைக்கான தெரிவுகளை அறிந்துகொள்வார்கள்.
தொழிற்பாதைக்கான தெரிவுகள் என்பது அவர்களது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது, முடிவெடுப்பது, தொடர்ந்து மேல்படிப்புப் படிப்பது மற்றும் ஒரு தொழிற்பாதையைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது.
உங்கள் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையின்போது, அவர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் பாதையை உருவாக்கிக் கொள்வார்கள்.
6e வகுப்பிலிருந்து, கற்பித்தல், பள்ளி வருகைகள், வெளியரங்கு நாட்கள், பணியமர்வுகள் மற்றும் வல்லுநர்களுடனான சந்திப்புகள் ஆகியவற்றின் மூலமாக பயிற்சி பெறுதல் மற்றும் தொழிற்பாதைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வர்.
புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் இணையதளத்தில் தேடுவதற்கும்கூட அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
நடுநிலைப் பள்ளியிலும், 3e வகுப்பிலும் அதன் பின் ஆறாம் வகுப்பிலும், பொது மற்றும் தொழில்முறை சார்ந்த 2nde யையும், மற்றும் டெர்மினேல் (இறுதி ஆண்டு) வகுப்பில், உங்கள் குழந்தைகள் அவர்களின் படிப்புக்கேற்ற வாழ்க்கைப் போக்கிற்கான தெரிவுகளையும் தேர்வு கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு உதவுவதற்கு, அவர்களுடைய செயல்திட்டங்கள் மற்றும் கல்வி முடிவுகளைக் கணக்கில் கொண்டு, நீங்கள் உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுடன், குறிப்பாக வகுப்பாசிரியருடன் பேச வேண்டும். பள்ளியின் உளவியலறிஞரையும் கூட நீங்கள் கலந்தாலோசிக்கலாம்.
வருடத்தின் தொடக்கத்திலிருந்தே சாத்தியமுள்ள பயிற்சி பற்றியும், பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பற்றியும் சிந்திக்கத் தொடங்குவது முக்கியமானதாகும், ஏனெனில் விண்ணப்பம், நேர்காணல் அல்லது தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சிலவற்றுக்கு தேர்ந்தெடுத்தல் மேற்கொள்ளப்படலாம். தேதிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் தொலைபேசியை கைவசம் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் உங்களை எந்த வேளையிலும் தொடர்புகொள்ளக்கூடும், அதன்பேரில் நீங்கள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கலாம்.
பொது மற்றும் தொழில்முறை சார்ந்த, 3e மற்றும் 2nde –யில், உங்கள் குழந்தைகள் பின்பற்ற எண்ணியிருக்கும் எதிர்கால படிப்பு பற்றி ஆசிரியர்களுக்கு த் தெரிவிப்பதற்காக, நீங்கள் சில ஆவணங்களை நிரப்ப வேண்டும். அதனைக் கொண்டு ஆசிரியர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும்.
உங்கள் பிள்ளைகளை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு, கணினிச் செயல்முறை ஒன்று மேற்கொள்ளப்படுகிறது; முக்கியமாக அவர்களின் தரநிலைகள் மற்றும் உங்களுடைய பிராந்தியத்தைப் பொறுத்து அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்.
தொழிற்பயிற்சியில் சேர்வதற்காக, தொழிற்பயிற்சி மையத்துக்குச் சென்று பணியமர்த்துபவர் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
டெர்மினேல் (இறுதி ஆண்டு) வகுப்பில், இணையதளத்தில் இளங்கலைப் பட்டச் சேர்க்கைப் பதிவுகளைப் பயன்படுத்தி உயர்கல்வியில் எந்தத் துறையில் சேர்ந்து பயில்வது என்பதை உங்கள் பிள்ளைகள் அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
ஒரு தொழில் அல்லது படிப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது திடீரென முடிவெடுக்கின்ற ஒரு செயல் அல்ல. அதற்குப் பரந்த அளவிலான பாட வகுப்புக்கள் உள்ளன மற்றும் உங்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் நேரத்தில் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளின் சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு கல்வி ஏற்பாடுகள் கிடைக்கின்றன:
- நீங்கள் சமீபத்தில் தான் பிரான்சு நாட்டுக்கு வந்திருந்து, உங்கள் குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசத் தெரியவில்லை என்றால், பிரெஞ்சு மொழியை விரைந்து கற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட படிப்பில் அவர்கள் சேர முடியும்.
- அவர்கள் தீவிரமான கல்விப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பொருத்தமான பொது மற்றும் தொழில்முறை சார்ந்த தனிப்பயிற்சி ஒன்று கொடுக்கப்படலாம்.
- அவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், நடுநிலைப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பிலும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் கிடைக்கப்பெறுகின்றன.
உங்கள் குழந்தைகளை அவர்களது படிப்பிலும், பின்னர் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பயிற்சி பெறுகின்ற மற்றும் தொழில் முடிவுகளை எடுக்கின்ற இடமாகிய அவர்களுடைய பணி வாழ்க்கையிலும் வெற்றிபெறச் செய்வதுமே பள்ளியின் நோக்கம் ஆகும்.