L'école expliquée aux Parents - பிரான்சில் பள்ளி செயல்திட்டம் - OnisepTV : l’information pour l’orientation en vidéo
L'école expliquée aux Parents - பிரான்சில் பள்ளி செயல்திட்டம்
Système Educatif
பள்ளி பெற்றோர்களுக்கு விளக்கியது
ஃபிரான்ஸில் உள்ள பள்ளியின் குறிக்கோள்
நீங்கள் ஒரு பெற்றோர், உங்களுக்கு குழந்தைகள் உள்ளன.
ஃபிரான்ஸில் வாழும் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளி செல்வது அவர்களது உரிமை, அவர்கள் ஃபிரான்ஸ் நாட்டவராக அல்லது அயல்நாட்டவராக இருந்தாலும், இதற்கு பிறப்பிடம், மதம், சரும தோற்றம், பாலினம் ஒரு பொருட்டல்ல.
இன்றைய காலகட்டத்தில், உடல்ஊனமுள்ள குழந்தைகளும் கூட பள்ளிக்குச் செல்லலாம்.
அறிவைப் புகட்டுதல், கற்றல், ஊக்குவிப்பு, திறன்களை மேம்படுத்தி, வேலைக்கு குழந்தையை தயார்படுத்துவது ஆகியன பள்ளியின் குறிக்கோள்.
ஃபிரான்ஸில் அரசு கல்வி இலவசம்:
மழலை முதல் உயர் கல்வி வரை கட்டணமும் செலுத்தாமல் அரசு கல்வி மையங்களுக்கு செல்கின்றனர்.
குழந்தைகளுக்கு புத்தகங்கள் இலவசம்.
பென்சில், ஒர்க்புக்ஸ் மட்டும் வாங்க வேண்டியிருக்கும்... சிற்றுண்டி கட்டணம், பள்ளியில் தங்குவதற்கான செலவு, அதோடு சில பல செலவுகளை மட்டும் ஏற்கவேண்டும்.
குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால், போதனைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
6 - 16 வயதுடைய குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம், 3 வயதில் மழலைக் கல்வியில் சேர்ப்பது உசிதமானது. சில சமயங்களில் 2 வயதில் சேர்க்கலாம்.
உங்கள் குழந்தை மற்றவர்களுடன் பழக, கலந்துரையாட, பேச, வரையக் கற்றுக்கொள்ளும்...
பிறகு உங்கள் குழந்தை வாசிக்க, எழுத, எண்ண, மற்றும் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளும்.
குழந்தை பள்ளியை நேசித்து அங்கு செழிப்பாக வளரும்.
கல்வி 16 வயதுடன் முடிவதில்லை, குழந்தை அதன் கல்வியை தொடர வேண்டுமென ஊக்குவிக்கப்படுகிறது.
குடும்பங்கள் & பள்ளிகள் - ஒரே இலக்கு:
பள்ளியில் குழந்தையின் வெற்றி, உரிமைகள் & கடமைகளுடன் நல்ல குடிமகனாக குழந்தை உருவாவது.
ஆசிரியர்கள் ஆற்றும் கடமையில் உங்களுக்கும் பங்குள்ளது:
உங்கள் குழந்தையின் கல்வியை கண்காணித்து, அவனை ஊக்கப்படுத்தவும்.
ஆர்க்கிடெட், கேபினெட் மேக்கர், ஜர்னலிஸ்ட், ஓவியர், கால்நடை மருத்துவர், புக் செல்லர், புக், ஃப்ளோரிஸ்ட், செயலாளர், கெமிஸ்ட், ஆர்கியாலஜிஸ்ட், காவலர், குழந்தை நல மருத்துவர், ஸ்டைலிஸ்ட், விமானி, போட்டோகிராஃபர், ஆண்டிக், டூர் கைட், வரவேற்பாளர், பயாலஜிஸ்ட், பிலிம் மேக்கர், சர்வேயர் ஆகிய துறைகளில் ஒன்றை தேர்வுசெய்ய பெற்றோராக வழிகாட்டி அவனுக்கு உதவலாம்.
பெற்றோர்களுக்காக இந்த 5 வீடியோ தொடர் பிரான்ஸில் இருக்கும் பள்ளிகளை அறிமுக படுத்துகின்றது, அவற்றின் அமைப்பு, அவற்றின்பொறுப்புக்கள், மற்றும் பிள்ளைகளின் படிப்பில் இருக்கும் ஒவ்வொரு காலகட்டங்களையும் விளக்குகிறது. இந்த வீடியோ 9 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து, பெற்றோர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பள்ளிகளின் நோக்கங்கள் மறறும் கொள்கைகளை அறிமுக படுத்துகிறது.
Vidéo publiée en novembre 2015
Cela peut vous intéresser
L'école expliquée aux parents - மத்திய பள்ளியில் மற்றும் உயர்நிலை பள்ளியில் திசையமைவு
மத்திய பள்ளி, மற்றும் இரண்டாம்நிலை பள்ளி திசையமைவு எப்படி செயலாகிறது?இந்த வீடியோவில் திசையமைவு செயல்...
L'école expliquée aux parents- பள்ளி வாழ்க்கை அமைப்பு
பள்ளி என்பது ஒரு வாழும் இடம்: இந்த வீடியோவில் மாணவர்களை பக்கத்திலிருந்துகவனிப்பவர்களை பாருங்கள், பள்ளியில் எப்படி...
L'école expliquée aux parents - மத்திய பள்ளி, இரண்டாம்நிலை பள்ளி மற்றும் பின்னர்
மத்திய பள்ளி, இரண்டாம் நிலை பள்ளி, பயிற்சி மையம்: 6ம் வகுப்பிலிருந்து டெர்மினலில் வரை நடப்பது மற்றும் அதன்...
L'école expliquée aux parentsமுதல் முறையாக பள்ளி : ஆரம்பப் பள்ளியின் அமைப்பு
சிறுவர் பள்ளி, மத்திய பள்ளி, அரசாங்க பள்ளி, தனியார் பள்ளி: மத்திய பள்ளி அமைப்பு, தெளிவாக மற்றும் சுருக்கமாக...